விஜய், ரம்பா நடிப்பில் வெளியான என்றென்றும் காதல் படத்தில் தொழில்நுட்ப கலைஞராக வேலை செய்து இருக்கிறேன் என நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.
அப்போதுதான் விஜய்யை முதன் முதலில் பார்த்ததாகவும் அப்படத்திற்குத் தேவையான தொழில்நுட்ப வேலைகளை சூரிதான் கவனித்து வந்ததாகவும் கூறியுள்ளார்.
அப்போது, வெளிச்சம் தரும் கருவியை இயக்கும் பொறுப்பு சூரிக்கு வழங்கப்பட்டது. விஜய் சம்பந்தப்பட்ட ஒரு காட்சியை அப்படத்தின் இயக்குநர் எடுத்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. சூரியின் முதலாளி அங்கு வர அந்தக் கருவியைத் தெரியாமல் அணைத்து விட்டார். இதனால், படப்பிடிப்பு சற்றுத் தடைபட்டதாம். உடனே சூரியின் முதலாளி சூரியிடம், ”நான் செய்தேன் எனச் சொல்ல வேண்டாம். நீ செய்த மாதிரியே இருக்கட்டும். நான் உன்னை கண்டிக்கிற மாதிரி கண்டிக்கிறேன்,”எனக் கூறி சூரியை திட்டினார். அதுமட்டுமில்லாமல் அங்கு இருந்த அனைவரும் சூரியை திட்டிக் கொண்டே இருந்தார்கள் எனச் சூரி தெரிவித்தார். பின்னர், அவர் தன் முதலாளியிடம், “உங்களுக்கு அறிவே கிடையாதா?” என்ற ஒரு கேள்வியை மட்டும் கேட்டுள்ளார். உடனே, படப்படிப்புத் தளத்தை விட்டு நான் வெளியேற்றப்பட்டேன் என்றார் சூரி.

