நடிகர் ஜெயம் ரவியின் 30வது படம் ‘பிரதர்’. இப்படத்தை இயக்குநர் எம். ராஜேஷ் இயக்கியுள்ளார். இப்படத்தில் சரண்யா பொன்வண்ணன், பூமிகா சாவ்லா, பிரியங்கா மோகன், விடிவி. கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அக்கா, தம்பி பாசத்தை மையமாக வைத்து இக்கதை உருவாக்கப்பட்டது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்தை ஸ்கிரோன் சீன் நிறுவனம் தயாரிக்கின்றது. இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என அதிகாரபூர்வமாக நேற்று அறிவிக்கப்பட்டது. இதே தேதியில், சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படமும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அமரனுடன் மோதும் பிரதர்
1 mins read
படம்: - ஊடகம்
குறிப்புச் சொற்கள்