அண்ணன் சூர்யா படத்தில் இணைந்த கார்த்தி

அண்ணன் சூர்யா படத்தில் இணைந்த கார்த்தி

1 mins read
6c359d5d-c4e7-4439-9759-33a9733067fc
‘கங்குவா’ படக் காட்சியில் சூர்யா. - படம்: ஊடகம்
multi-img1 of 2

கமலின் ‘விக்ரம்’ படத்தின் இறுதிக் காட்சியில் ‘ரோலக்ஸ்’ கதாபாத்திரத்தில் சூர்யா நடித்தது பெரும் வரவேற்பைப் பெற்றதுபோல், ‘கங்குவா’ படத்தில் கார்த்தியின் பாத்திரமும் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுவதாக கோலிவுட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில மாதங்களுக்கு முன்னரே ‘கங்குவா’ படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்த நிலையில், இப்போது திடீரென சூர்யாவின் தம்பி கார்த்தியையும் படத்தில் நடிக்கவைத்துள்ளனர்.

‘கங்குவா’ படம் இரு பாகங்களாக வெளிவரும் என்ற எதிர்பார்ப்பு நிலவும் நிலையில், அதற்கான முன்னோட்டமாக முதல் பாகத்தில் கார்த்தியையும் படக்குழுவினர் நுழைத்துள்ளனர்.

சென்னையில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் பிரம்மாண்ட அரங்கம் அமைத்து, சூர்யா, கார்த்தியின் காட்சிகளைப் படமாக்கியுள்ளனர். கார்த்தி நடித்துள்ள பகுதியின் கிராபிக்ஸ் வேலைகளும் மும்முரமாக நடந்து வருகின்றன.

சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘கங்குவா’ படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்த்ராஜ், கோவை சரளா, கருணாஸ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். அக்டோபர் 10ஆம் தேதியன்று இப்படம் திரைக்கு வரவுள்ளது.

இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஆதி நெருப்பே, ஆறாத நெருப்பே, மாய நெருப்பே, மலை நெருப்பே’ பாடல் வெளியாகி எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. கொடைக்கானல், ராஜமுந்திரியில் தீப்பந்தங்களின் வெளிச்சத்துடன் அந்தக் காட்சிகள் படமாக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்