கேரள மாநிலத்தின் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ள சோக நிகழ்வு நாட்டையே உலுக்கி உள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு நடிகர், நடிகைகள் பலரும் நிதி வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், வயநாடு மக்களின் மீட்புப்பணிக்காக கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு நடிகர் சிரஞ்சீவியும் அவரது மகன் ராம்சரணும் இணைந்து ரூ.1 கோடி நிதியுதவி வழங்கியுள்ளனர்.
மோகன்லால் ரூ.3 கோடி நிதியுதவி அளித்ததோடு பாதிக்கப்பட்ட பகுதிக்கு நேரடியாக ராணுவச் சீருடை அணிந்து சென்று நிவாரணப் பணிகளைப் பார்வையிட்டார்.
நடிகர் அல்லு அர்ஜுன் ரூ.25 லட்சம் வழங்குவதாக தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நயன்தாரா-விக்னேஷ் சிவன் ரூ.20 லட்சம் வழங்கியுள்ளனர். பகத் ஃபாசில்- நஸ்ரியா ரூ.25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர்.
நடிகை நவ்யா நாயர் தனது பங்களிப்பாக ஒரு லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கியுள்ளார்.
ஏற்கெனவே, நடிகர் விக்ரம் ரூ. 20 லட்சம், நடிகர்கள் சூர்யா, கார்த்தி, ஜோதிகா ரூ.50 லட்சம், மலையாள நடிகர் மம்முட்டியும் அவரது மகன் துல்கர் சல்மானும் ரூ,35 லட்சம், ராஷ்மிகா மந்தனா ரூ,10 லட்சம், மலையாள நடிகர் பகத் பாசிலும் அவரது மனைவியுமான நஸ்ரியாவும் ரூ. 25 லட்சம் வழங்கி உள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
பல்வேறு அரசியல் கட்சியினரும் நிவாரண நிதியை தாராளமாக வழங்க ஆதரவுக்கரம் நீட்டி வருகின்றனர்.

