தெலுங்கு நடிகர் ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ டிசம்பரில் வெளியீடு காணும்

1 mins read
02567ff7-1979-42f2-9ad1-03286c7c55ec
தெலுங்கு நடிகர் ராம் சரண் நடித்த ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் டிசம்பர் மாதம் வெளியீடு காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. - படம்: ஊடகம்

தெலுங்கு நடிகர் ராம் சரண் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் ‘கேம் சேஞ்சர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் கார்த்தி சுப்பராஜ் இப்படத்திற்கு கதையை எழுதியுள்ளார்.

இப்படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரகனி, நாசர் மற்றும் பலர் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்ற நிலையில், தற்போது படத்திற்கான டப்பிங் பணிகள் துவங்கி இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

சில மாதங்களுக்கு முன் கேம் சேஞ்சர் படத்தின் “ஜரகண்டி” என்ற பாடலை படக்குழு வெளியிட்டது. இப்பாடல் மக்களிடயே நல்ல வரவேற்பை பெற்றது.

தமன் இந்தப் படத்திற்கு இசையமைக்க, ஒளிப்பதிவுப் பணிகளை திருநாவுக்கரசு மேற்கொள்கிறார். தில் ராஜூ தயாரித்துள்ள ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் வருகிற டிசம்பர் மாதம் வெளியீடு காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திவெளியீடுராம் சரண்