வயநாடு நிலச்சரிவு: நடிகர் பிரபாஸ் ரூ.2 கோடி நிதியுதவி

வயநாடு நிலச்சரிவு: நடிகர் பிரபாஸ் ரூ.2 கோடி நிதியுதவி

கோப்புப்படம்: ஊடகம்

07 Aug 2024 - 3:52 pm

1 mins read

கேரள மாநிலத்தின் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் நூற்றுக்கணக்கானோர் பலியாகி விட்டனர். இதையடுத்து கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு நடிகர் நடிகைகள் பலர் நிதி வழங்கி வருகிறார்கள்.

நடிகர்கள் விக்ரம், சூர்யா, கார்த்தி, மம்முட்டி, மோகன்லால், சிரஞ்சீவி, துல்கர் சல்மான், நடிகர் ஜெயராம், பகத் பாசில், நடிகைகள் ஜோதிகா, ராஷ்மிகா மந்தனா, நஸ்ரியா உள்ளிட்ட பலர் நிதி வழங்கி இருக்கிறார்கள்.

இந்நிலையில், நடிகர் பிரபாஸ் ரூ.2 கோடி வழங்கியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திபிரபாஸ்வயநாடு

தொடர்புடைய செய்திகள்