நடிகை சோனியா அகர்வால் நடித்த 7ஜி திரைப்படம் ஜூலை 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியீடு கண்டது. இப்போது ஆஹா (aha) தமிழ் ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியீடு காணவுள்ளது.
டிரீம் ஹவுஸ் நிறுவனம் தயாரித்துள்ள ஹாரர் படத்தை என்.ஹாரூன் இயக்கியுள்ளார். ‘7ஜி’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் சோனியா அகர்வால், ஸ்ம்ருதி வெங்கட் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், சித்தார்த் விபின், சினேகா குப்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சித்தார்த் விபின் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு கண்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்தப் படம் அடுக்குமாடிக் குடியிருப்பில் நடைபெறும் அமானுஷ்யங்களை அடிப்படையாகக் கொண்ட கதையாக உள்ளது. இது நகைச்சுவை மற்றும் திகில் நிறைந்த படமாகும்.


