‘பிக்பாஸ் 8’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க விஜய் சேதுபதிக்கு வாய்ப்பு

1 mins read
ef31379a-f7ab-41e1-b5b9-fd5da7d4eaf8
நடிகர்கள் சிம்பு, கமல்ஹாசன், விஜய் சேதுபதி. - படம்: ஊடகம்

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை இதுவரை ஏழு ஆண்டுகளாகத் தொகுத்து வழங்கிய ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் எட்டாவது முறையாக தொகுத்து வழங்க இயலாது என்று அறிவித்தது முதலே, ‘பிக் பாஸ் பருவம் 8’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கப்போகும் புதிய தொகுப்பாளர் யார் எனும் அலசலும் ஆரூடங்களும் சமூக ஊடகங்களில் பரபரப்பாகி வருகின்றன.

இனி யாரை அந்த நிகழ்வின் தொகுப்பாளராக போடலாம் என்பது குறித்தும் ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

நடிகர் சிம்பு அல்லது விஜய் சேதுபதி இருவரில் ஒருவர் கமலுக்குப் பதிலாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கலாம் எனக் கூறப்பட்ட நிலையில், இப்போட்டியில் விஜய் சேதுபதி சிம்புவை முந்துவதாகக் கூறப்படுகிறது.

விஜய் தொலைக்காட்சி தரப்பிலிருந்து விஜய் சேதுபதியிடம் முதல்கட்டப் பேச்சுவார்த்தைகள் முடிந்துவிட்டதாகவும் ஆகஸ்ட் 15ஆம் தேதி ‘பிக் பாஸ் சீசன் 8’ தொடர்பான அறிவிப்பு வரலாமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, விஜய் தொலைக்காட்சி தரப்பில் இருந்து நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர்கள் சிம்பு, அரவிந்த்சாமி, பிரகாஷ் ராஜ் ஆகிய நால்வரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் இவர்களில் ஒருவருக்கு ‘பிக் பாஸ் சீசன் 8’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டது.

சிம்புவும் ரம்யா கிருஷ்ணனும் ஏற்கெனவே பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய அனுபவமுள்ளவர்கள். அதேபோல் பிரகாஷ்ராஜும் அரவிந்த்சாமியும் ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்