நடிகர் விஜய்யின் ‘தி கோட்’ படம் செப்டம்பர் 5ஆம் தேதி பான் இந்தியா படமாக உலகம் முழுவதும் வெளியாகிறது.
இதில், மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, சினேகா உட்பட பலர் நடிக்கின்றனர். வெங்கட் பிரபு இயக்கத்தில் இது உருவாகி வருகிறது.
இப்படத்தை வாங்கியுள்ள விநியோகிப்பாளர்கள் பல்வேறு வியூகங்களை வகுத்துள்ளார்களாம்.
அந்த வகையில் தமிழக உரிமையை வாங்கியுள்ள ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் பட வெளியீடு பற்றிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்நிறுவனத்தின் உரிமையாளரான ராகுல், “அந்த ஏரியா, இந்த ஏரியா, ஆல் ஏரியாஸ் தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக தமிழகத்தில் அனைத்துத் திரையரங்குகளிலும் செப்டம்பர் 5 முதல் ‘தி கோட்’ படம் திரையிடப்படுகிறது,” என்று கூறியுள்ளார்.
இதன் மூலம் படத்தின் ஆரம்ப நாட்களின் வசூல் புதிய சாதனையைப் படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில இடங்களில் படத்திற்கான சிறப்புக் காட்சிகள், ரசிகர் மன்றக் காட்சிகளின் முன்பதிவும் ஆரம்பமாகியுள்ளது.
இப்படத்தின் ‘ஆடியோ லாஞ்ச்’, ‘டிரெய்லர்’ குறித்து கோலிவுட்டில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.
இத்திரைப்படம் 2004ல் ரஷ்யாவின் மாஸ்கோ நகரத்தில் நிகழ்ந்த தற்கொலை குண்டுவெடிப்பு சம்பவத்தை மையப்படுத்தியது என்கிறார்கள் சிலர்.
தொடர்புடைய செய்திகள்
மேலும் ‘எபிக்’, ‘ஐமேக்ஸ்’ திரைகளிலும் வெளியாகும் என்பதை சிறப்பு விளம்பரப் பலகைகளோடு படக்குழு அறிவித்திருக்கிறது.
வரும் நாள்களில் இத்திரைப்படத்தின் அடுத்தடுத்த விவரங்களுக்கு பஞ்சமிருக்காது என்று படத்தரப்பினர் கூறி வருகின்றனர்.

