தனுஷ் முதல் முறையாக இயக்கி, தானே நடித்திருந்த ‘ராயன்’ வசூல் வேட்டையாடி வருகிறது.
குறிப்பாக தனுஷின் படங்களிலேயே அதிக வசூல் செய்த படமாகவும் ராயன் பார்க்கப்படுகிறது.
கடந்த மாதம் 26ஆம் தேதி ராயன் வெளியானது. பழைய திரைக்கதை, அதிக வன்முறை என்று சொல்லப்பட்டாலும் தனுஷ் கலந்த மசாலாவால் இன்றும் சக்கைப் போடு போட்டு வருகிறது,
அதிலும், ‘உசுரே நீதானே’ என்ற ஒற்றை வரியின் மூலம் படத்தை வேறு தளத்தில் தூக்கி நிறுத்தியிருக்கிறார் ரகுமான்.
பொதுவாக ஒரு திரைப்படம் முதல் இரண்டு மூன்று நாள்களுக்கு தாக்குப்பிடிப்பதே கடினமான உள்ள நிலையில் ஆறு படங்கள் ஒரே நாளில் வெளியான பின்னரும் இன்றும் கலக்கி வருகிறது ராயன்.
வார இறுதி நாள்களைக் கடந்து, வார நாள்களிலும் திரையரங்குகளில் கூட்டம் கூடி வருகிறது.
நடப்பு ஆண்டில் எந்தப் படமும் வசூலில் சோபிக்காத நிலையில் அரண்மனை 4 திரைப்படம் மட்டும் 100 கோடி வசூலைக் கடந்தது.
இதையடுத்து, விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படமும் 100 கோடியை கடந்தது. மூன்றாவதாக வெளியான சங்கரின் இந்தியன்- 2 திரைப்படமும் சுமார் 150 கோடியைக் கடந்ததாக தகவல் வெளியானது.
தொடர்புடைய செய்திகள்
இதனையடுத்து வெளியான ராயன், வெறும் 10 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலை கடந்து உள்ளது.
மேலும், நடப்பு ஆண்டிலேயே அதிக வசூல் செய்த படமாக ராயன் மாறியுள்ளது என்று தயாரிப்பாளர் தரப்பு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியான காணொளியில், தனுஷின் படங்களிலேயே இதுதான் அதிகம் வசூல் செய்த திரைப்படமாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

