திருமணத்திற்கு பிறகு ஜோதிகா, மஞ்சு வாரியர், பிரியாமணி உள்ளிட்ட பல நடிகைகளும் சினிமாவில் மீண்டும் சுறுசுறுப்பாக நடித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் திருமணத்திற்குப் பிறகு சில படங்களில் நடித்த சினேகாவுக்கு தற்போது எதிர்பார்த்தபடி பட வாய்ப்புகள் இல்லை.
தற்போது வெங்கட் பிரபு இயக்கியுள்ள ‛கோட்’ படத்தில் அப்பா விஜய்க்கு ஜோடியாக நடித்திருக்கிறார் சினேகா.
அதனால் இந்த படம் தனக்கு புதிய திருப்பு முனையாக அமையும் என்று எதிர்பார்க்கும் சினேகா, புதிய படங்களில் நடிப்பதற்கும் முயற்சிகளை எடுத்து வருகிறார்.
தனது உடல் எடையை குறைத்து, கச்சிதமாக தன்னை மாற்றும் முயற்சியிலும் அவர் தீவிரம் காட்டி வருகிறார்.
இதற்காக தீவிர உடற்பயிற்சிகளில் அவர் ஈடுபட்டு வருகிறார்.
உடற்பயிற்சிக் கூடத்தில் வியர்வை சொட்ட சொட்ட தான் பயிற்சி செய்யும் ஒரு காணொளியை சினேகா இணையப் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

