சித்தார்த் நடிப்பில் வெளியான ‘சித்தா’ படத்தில் நடித்து மக்களிடையே பிரபலமானவர் நடிகை நிமிஷா சஜயன்.
தொடர்ந்து தமிழ், மலையாளப் படங்களில் நடித்து வரும் இவர், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தில் பழங்குடியைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி பெண்ணாக நடித்திருந்தார்.
அண்மையில் நடந்து முடிந்த சைமா விருது வழங்கும் விழாவில் ‘சித்தா’ படத்திற்காகச் சிறந்த நடிகைக்கான விருதை வென்ற இவர், அடுத்தடுத்து வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
திகிலூட்டும் அம்சங்களுடன் கூடிய குடும்பக் கதையாக ‘என்ன விலை’ படம் தயாராகிறது. சஞ்சீவ் பழூர் இயக்கியுள்ள இப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கும் நிமிஷாவுடன் கருணாஸ், ஒய்.ஜி மகேந்திரன், ராஜேந்திரன், விஜயலட்சுமி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. விரைவில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

