தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘தங்கலான்’ விக்ரம் சம்பளம் ரூ.30 கோடி

1 mins read
943a8cef-3afb-451a-bf87-20c2768c009c
‘தங்கலான்’ பட நடிகர்கள். - படம்: ஊடகம்

‘தங்கலான்’ படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கும் விக்ரம் இப்படத்திற்காக வாங்கிய சம்பளம் என்னவாக இருக்கும் என ரசிகர்கள் கேட்டு வந்தனர். அதற்கான விடை தற்போது கிடைத்துள்ளது.

‘தங்கலான்’ படத்திற்காக விக்ரம் ரூ.30 கோடி சம்பளமாக வாங்கியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள் பலரும் பல ஆண்டுகளாக விக்ரம் நடித்து வருகின்றார். அதைத்தவிர முன்னணி நடிகராகவும் இருக்கின்றார். அப்படி இருக்கையில் விக்ரம் ரூ.30 கோடி தான் சம்பளம் வாங்குகின்றாரா என சிலர் சந்தேகமாக கேட்டு வருகின்றனர்.

ஏனெனில், விக்ரமிற்குப் பிறகு நடிக்க வந்த தனுஷ், சிவகார்த்திகேயன் எல்லாம் அதிகமாக சம்பளம் வாங்கும் நிலையில், விக்ரம் மட்டும் ரூ.30 கோடி சம்பளமாக வாங்குவது ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி உள்ளது. இருப்பினும் இந்தத் தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்நிலையில், ‘தங்கலான்’ படத்திற்காக விக்ரம் என்ன சம்பளம் வாங்கினாலும் இதன்பிறகு கண்டிப்பாக அவரது சம்பளம் அதிகரிக்கும் என்றும் உறுதியாகச் சொல்லப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்