தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கண்ணீருடன்தான் வீடு திரும்புவேன்: ராஷ்மிகா

1 mins read
89be3172-4d6b-4949-8e7d-4288856f762f
நடிகை ராஷ்மிகா மந்தனா. - படம்: ஊடகம்

வாய்ப்புகள் தருவதாகக் கூறி பல படங்களிலும் இருந்து என்னைத் தூக்கி எறிந்தனர். பல பிரச்சினைகள், சிரமங்களை எதிர்கொண்டுதான் திரையுலகில் இப்போது பிரபலமாகி வருவதாகக் கூறுகிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா.

தற்போது தெலுங்கில் ‘புஷ்பா 2’, தமிழில் ‘குபேரா’, இந்தியில் ‘ஜாவா’, ‘சிக்கந்தர்’ போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.

“சினிமாவிற்கு ஏற்ற முகம் இல்லை எனக் கூறி ஆரம்பத்தில் பலரும் என்னை நிராகரித்தார்கள். பட ஒத்திகைக்கு போய்விட்டு வீட்டிற்கு வரும்போது கண்ணீருடன்தான் வருவேன். கிட்டத்தட்ட 25 படங்கள் வரை நிராகரிக்கப்பட்டிருக்கிறேன்.

இருந்தாலும் தொடர்ந்து முயற்சி செய்ததால் வாய்ப்பு கிட்டியது. அதனைச் சரியாகப் பயன்படுத்தி இந்நிலைக்கு உயர்ந்துள்ளேன்,’’ என்கிறார் ராஷ்மிகா.

குறிப்புச் சொற்கள்