தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆகஸ்ட் 17 ‘கோட்’ முன்னோட்டம்

1 mins read
64d3b6a3-03ab-427b-be60-395b2d702049
படம்: - ஊடகம்

நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கும் ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ (கோட்) படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், சினேகா, லைலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் கோட் படத்தின் முன்னோட்டம் ஆகஸ்ட் 17 ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தப் படத்தில் அப்பா - மகன் என இரட்டை வேடத்தில் நடித்துள்ளார் விஜய். மேலும், மகன் விஜய்யை ஹாலிவுட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மிகவும் இளமையாகக் காட்டியிருக்கிறார் இயக்குநர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது முழுவீச்சில் தொழில்நுட்பப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கோட் படம் அடுத்த மாதம் 5ஆம் தேதி வெளியாகும் என்று சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.

இதற்கிடையே, விஜய்யின் கடைசிப் படமான ‘தளபதி 69’ படத்தை எச்.வினோத் இயக்குவதாகத் தெரிவித்துள்ளார். மேலும் இது அரசியல் படம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்