தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஒரு பாடலுக்கு 24 ஆடைகள்

1 mins read
c030cd52-e547-41e7-bfef-7efba9dc87b5
அல்லு அர்ஜுன் - படம்: ஊடகம்

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு ‘புஷ்பா’ படம் வெளியாகியது. அது மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது.

இப்படத்தில் இடம்பெற்றிருந்த அனைத்து பாடல்களும் மக்களால் ரசிக்கப்பட்டு அமோக வரவேற்பை பெற்றது.

‘ஏய் பேட்டா இது என் பட்டா’ பாடல் பலரால் ரசிக்கப்பட்ட பாடலாகவும் மாறியது. இந்தப் பாடலில் நடிக்க அல்லு அர்ஜுன் 24 உடைகள் அணிந்தார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இப்படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்புப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்