தேசிய திரைப்பட விருதுகளை அள்ளிய பொன்னியின் செல்வன்

1 mins read
1d24bfbb-e9e8-400a-955b-2621fd4b0b9d
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான படம் பொன்னியின் செல்வன்-1 - படம்: சமூக ஊடகம்

70 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், சிறந்த தமிழ்த் திரைப்படமாக தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன்-1 தேர்வு செய்யப்பட்டுள்ளது.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் சிறந்த பின்னணி இசைக்காக ஏ.ஆர். ரகுமானுக்கு சிறந்த இசை அமைப்பாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த ஒளிப்பதிவுக்கு ரவி வர்மனுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல, சிறந்த நடிகைக்கான விருது திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்த நித்யா மேனனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த நடனக் காட்சிகளுக்காக திருச்சிற்றம்பலம் படத்தில் இடம்பெற்ற ‘மேகம் கருக்காதா பெண்ணே’ என்ற பாடலுக்காக ஜானி மாஸ்டருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்