‘அஜித் என் வழிகாட்டி’

‘அஜித் என் வழிகாட்டி’

2 mins read
e9e87516-bf23-4973-ac5b-408434901b0c
நீண்ட இடைவெளிக்குப் பிறகு எஸ்.ஜே.சூர்யா, அஜித்துடன் `குட் பேட் அக்லி’ படத்தில் நடித்து வருகிறார். - படம்: எஸ்.ஜே.சூர்யா/சமூக ஊடகம்

விடாமுயற்சி படத்திற்குப் பிறகு நடிகர் அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. அதிரடிக் காட்சிகள் அதிகம் உள்ள படமாக இந்தப் படம் உருவாகி வருவதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

படத்தில் அஜித்துடன் எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்து வருகிறார். வாலி படத்தில் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் அஜித் இரட்டை கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார். அஜித்துக்கு இந்தப் படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. படம் திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு எஸ்.ஜே.சூர்யா, அஜித்துடன் `குட் பேட் அக்லி’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் படப்பிடிப்பு இடைவேளையில் அஜித்தை எஸ்.ஜே.சூர்யா திடீரென சந்தித்துள்ளார். அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் “பல ஆண்டுகளுக்குப் பின் என் வழிகாட்டி ஏகே (அஜித் குமார்) உடன் ஒரு மகிழ்ச்சியான தருணம்” என அவர் பதிவிட்டார்.

குட் பேட் அக்லி படப்பிடிப்பு இந்த ஆண்டு டிசம்பரில் முடியும் என்றும் அதன் பிறகு அஜித் ஓய்வெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

விஜய், கமல் என முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்த எஸ்.ஜே. சூர்யா இப்போது அஜித்துக்கு வில்லனாக நடித்துள்ளது ரசிகர்கள் இடையே பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

‘சூர்யாவின் சனிக்கிழமை’

இந்நிலையில் நானி, எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள ‘சூர்யாவின் சனிக்கிழமை’ படத்தின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது.

இதனை ‘ஆர்ஆர்ஆர்’ படத்தை தயாரித்த டிவிவி என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிக்கிறது.

படத்தில் நானி, எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா மோகன் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார். ஆகஸ்ட் 29ஆம் தேதி படம் வெளியாகவுள்ளது.

முன்னோட்டக் காட்சிக்கு சமூக ஊடகத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

குறிப்புச் சொற்கள்