திரையுலகின் ஆரம்ப காலகட்டங்களில் நடிகை, தயாரிப்பாளர் என பெரிய ஆளுமையுடன் வலம் வந்தவர் அஞ்சலி தேவி. அந்தக் காலத்திலேயே அஞ்சலி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி 30க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்தவர்.
தமிழில் ஏராளமான படங்களை தயாரித்த அஞ்சலி தேவி ‘பூங்கோதை’ என்ற படத்தை தயாரித்தார். 1953ஆம் ஆண்டு இப்படம் வெளியானது.
இந்த படத்தின் சிறப்பு என்னவென்றால் இந்த படத்தில் தான் நடிகர் திலகம் சிவாஜி இரண்டாவது நாயகனாக அறிமுகமானார். திரையுலகிற்குள் நுழைய சிவாஜி வாய்ப்பு தேடிக்கொண்டிருந்த காலத்தில், அஞ்சலியை சந்தித்து வாய்ப்பு கேட்க அவர் கொடுத்த வாய்ப்பு தான் இது. ஆனால் இந்த படம் வெளிவர காலதாமதமானதால் சிவாஜி நடித்த 2வது படமான பராசக்தி முதலில் வெளியானது. அதுவே அவருடைய முதல்படமாகவும் ஆனது. பூங்கோதை படத்திற்காக சிவாஜி வாங்கிய சம்பளம் 101 ரூபாய். மேலும் அஞ்சலி தேவியை முதலாளி என்றுதான் கூப்பிடுவாராம் சிவாஜி.