மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்விகபூர் தற்போது தெலுங்கில் தேவரா என்ற படத்தில் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். தமிழில் நடிப்பதற்கு ஏற்ற கதைகளைத் தேடிவரும் ஜான்வி அண்மையில் நேர்காணல் ஒன்றை அளித்திருந்தார்.
அதில், தான் நடிக்கும் படங்களுக்காக எவ்வளவு சிரமத்தையும் ஏற்பதற்குத் தயாராக இருப்பதாகவும் ஆனால் எக்காரணம் கொண்டும் தலையில் மொட்டை மட்டும் அடித்து நடிக்கவே மாட்டேன் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
அந்தக் கதாபாத்திரத்திற்கு ஆஸ்கர் விருது கிடைக்கும் எனச் சொன்னாலும் நான் அதைச் செய்ய மாட்டேன் என ஜான்வி கூறினார்.
“என் தலைமுடியைப் பராமரிக்க என் அம்மா அதிக அக்கறை எடுத்துக் கொண்டார். நான் என் முதல் படத்திற்காக தலை முடியை சிறிய அளவில் வெட்டியதற்கு அவர் கோபமடைந்தார். அதன் காரணமாகவே நானும் என் தாயார் போலவே எனது தலைமுடியைப் பராமரிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறேன்,” என்றார் ஜான்வி கபூர். இந்நிலையில், அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ரூ 1,15,500 மதிப்புடைய ஆர்கன்சா சேலையை ஜான்வி அணிந்திருந்தார். அந்த சேலையின் விலை தொடர்பான தகவல் தற்போது இணையத்தில் பரவலாகி வருகிறது.