தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விமர்சனங்களுக்கு வெற்றியால் பதிலடி கொடுத்த பிரியா பவானி

3 mins read
46f647a6-eba6-4295-a8af-9a8f99fc07d5
நடிகை பிரியா பவானி சங்கர். - படம்: ஊடகம்

தமிழ் திரையுலகில் நட்சத்திர நடிகைகளில் ஒருவராக வலம்வருபவர் பிரியா பவானி சங்கர்.

திரையுலகில் எந்தவொரு பின்புலமும் இல்லாமல் தன் திறமையை மட்டும் நம்பி திரையுலகிற்குள் நுழையும் நடிகைகளில் ஒருவராக இவர் திகழ்ந்து வருகிறார்.

அண்மையில், இவர் நடிப்பில் வெளியான ‘டிமான்டி காலனி 2’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. படத்திற்கு நல்ல வசூலும் கிடைத்து வருகிறது. இதனால் பிரியா பவானி சங்கர் மகிழ்ச்சியில் இருக்கிறார்.

தொடர்ந்து ரசிகர்கள் பிரியா பவானி ஷங்கரை பாராட்டியும் வாழ்த்தியும் வருகிறார்கள். அதில் ஒரு நபர், “டிமான்டி காலனி 2 படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்திருக்கிறது. எனவே, இனிமேல் நீங்கள் தலைநிமிர்ந்து நடங்க பிரியா. நீங்க நடிச்ச படம் மிகப் பெரிய வெற்றி படமாகிவிட்டது,” எனக் கூறி காணொளி ஒன்றில் பிரியா பவானி மகிழ்ச்சியாக இருப்பது போல் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.

இந்தக் காணொளிக்கு பதில் அளித்திருக்கும் பிரியா பவானி சங்கர்,” நான் எப்பவுமே தலை நிமிர்ந்து தான் சார் நடந்து கொண்டு இருக்கிறேன். உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி,” என பதிவிட்டார். இந்தப் பதிவு தற்போது இணையத்தில் பரவலாகி வருகிறது.

ஊடக உலகில் செய்தி வாசிப்பாளினியாக அறிமுகமான இவருக்கு சின்னத்திரை நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பு தேடிவந்தது. கல்யாணம் முதல் காதல் வரை எனும் தொலைக்காட்சி தொடரில் நடித்ததன் மூலமாக பிரியா பவானி சங்கர் மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.

அந்த தொடர் இவருக்கு பெரும் அடையாளத்தையும் பெயரும் ஏற்படுத்திக் கொடுத்தது. இதன் மூலம் சின்னத்திரை நடிகையாக இருந்து வந்த பிரியா பவானி சங்கர் வெள்ளித்திரை நடிகையானார்.

திரையுலகில் முதன்முதலில் மேயாத மான் திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார். இந்த திரைப்படம் அவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை கொடுத்தது.

முதல் படத்திலிருந்து நல்ல பெயரெடுத்த பிரியா பவானி சங்கருக்கு தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா, களத்தில் சந்திப்போம், கசடதபர, ஓமன பெண்ணே, யானை, குருதி ஆட்டம், திருச்சிற்றம்பலம், அகிலன் ,ருத்ரன் ,பொம்மை இப்படி பல்வேறு தொடர் வெற்றி திரைப்படங்களில் நடித்து வந்தார்.

இதனிடையே, அண்மை காலமாக இவர் நடித்த படங்கள் படுதோல்வி அடைந்தன. இதனால் பிரியா பவானிசங்கர் மிகுந்த மன வருத்தத்திற்கு ஆளாகி இருந்தார்.

திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெற்றி அடைந்தது. ஆனால் அதில் அவரது கதாபாத்திரம் பெரிதாக பேசும்படி அமையவில்லை. அதையடுத்து அகிலன், 10 தல, ருத்ரன் , பொம்மை இப்படி பல திரைப்படங்கள் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்தது.

அது மட்டும் இல்லாமல் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புக்கு இடையில் உருவாகிய இந்தியன் 2 திரைப்படமும் பெரும் தோல்வி அடைந்ததால் பிரியா பவானி ஷங்கரை பலரும் விமர்சித்து கலாய்க்க தொடங்கினர்.

இதுகுறித்து, பேட்டி ஒன்றில் பேசி இருந்த பிரியா பவானி சங்கர், “ஒரு படம் வெற்றி அடைந்தால் அதில் என்னை பாராட்டுவதற்கு ஆளில்லை. ஆனால் ஒரு படம் தோல்வி அடைந்து விட்டால் அந்த முழு படத்தின் தோல்விக்கு காரணம் நான் தான் என கூறி விமர்சிக்கிறார்கள் என இது எந்த விதத்தில் நியாயம்?,” எனக் கேள்வி எழுப்பி பிரியா பவானி சங்கர் மிகுந்த வருத்தத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

இந்த நிலையில் தொடர் தோல்விக்கு பிறகு பிரியா பவானி சங்கருக்கு டிமான்டி காலனி 2 திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருக்கிறது.

குறிப்புச் சொற்கள்