தேசிய விருதை புனித்துக்கு அர்ப்பணித்த ரிஷப்

1 mins read
0df5620c-c9a5-4648-a65b-9a91f106febe
படம்: - இந்திய ஊடகம்

ரிஷப் ஷெட்டி இயக்கம் நடிப்பில் 2022ம் ஆண்டில் வெளிவந்த ‘காந்தாரா’ கன்னடத் திரைப்படத்திற்குச் சிறந்த நடிகருக்கான விருது, சிறந்த என்டெர்டெயின்மென்ட் படத்திற்கான விருது என இரண்டு விருதுகள் கிடைத்தது. தேசிய விருதுகளுக்கான அறிவிப்புகள் வந்த பிறகு பெங்களூருவில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் ரிஷப் ஷெட்டி. அப்போது, தேசிய விருதுகளை மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார், கன்னட ரசிகர்கள் ஆகியோருக்கு அர்ப்பணிப்பதாக அறிவித்தார். மேலும் அவர் பேசுகையில், மக்கள் படத்தை ரசிக்கும் போது நமக்கான பொறுப்பும் அதிகமாகிறது. விருதுகள் வரும் போது அந்தப் பொறுப்பு இன்னும் அதிகமாகிறது. விருது அறிவிப்பு வந்தவுடன் எனது மனைவிதான் முதலில் என்னை வாழ்த்தினார். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான ஒன்று. ‘கேஜிஎப்’ யஷ் உடனே போன் செய்து வாழ்த்தினார். எனது மகள் பிறந்த போது எல்லோரும் அவளை மகாலட்சுமி என்று சொன்னார்கள். தற்போது வரமகாலட்சுமி விழா நாட்கள் என்பதால் அந்த மகிழ்ச்சி இன்னும் இரட்டிப்பாகி உள்ளது,” என்று தனது மகிழ்வைப் பகிர்ந்து கொண்டார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்