நகைச்சுவை நடிகருக்கு உதவிய விஜய் சேதுபதி

நகைச்சுவை நடிகருக்கு உதவிய விஜய் சேதுபதி

1 mins read
a171dd56-e274-4e73-8a81-867b92d46c43
விஜய் சேதுபதியுடன் நகைச்சுவை நடிகர் தெனாலி (இடமிருந்து இரண்டாவது). - படம்: ஊடகம்

நகைச்சுவை நடிகர் தெனாலியின் மகனுக்கு கல்விக்கட்டணத்தைச் செலுத்தி, அவருடைய துயரத்தைத் துடைத்திருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி. ‘ரன்’, ‘சாமி’,’ரோஜாக்கூட்டம்’, ‘தென்னவன்’ என 45க்கும் மேற்பட்ட படங்களில் விவேக்குடன் இணைந்து நடித்தவர் தெனாலி.

விவேக் மறைவிற்குப்பிறகு பட வாய்ப்புகள் குறைந்து, தனது பிள்ளைகளைப் படிக்கவைக்க முடியாமல் சிரமப்பட்டு வருகிறார். தெனாலியின் குடும்பச் சூழ்நிலையை உணர்ந்த நடிகர் விஜய் சேதுபதி, தெனாலியின் மகனின் கல்விக்கட்டணத்தை செலுத்தினார். இந்தத் தகவல் சமூகத் தளங்களில் பரவியதை அடுத்து விஜய சேதுபதிக்குப் பாராட்டுகள் குவித்துவருகிறது.

இதுகுறித்து, நடிகர் தெனாலி கூறியபோது ”விஜய் சேதுபதி நடித்த படத்தின் பெயர் மட்டும் மகாராஜா இல்லை. உண்மையில், அவர் அந்த பெயருக்கு ஏற்றவாறு சிரமப்படுகிறவர்களுக்கு அள்ளிக் கொடுக்கின்ற மகாராஜாதான்”என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்