வெள்ளித்திரையில் ஒளிர்ந்த பிரபலங்கள் பலரும் சின்னதிரைக்கு வருவதும் சின்னதிரையிலிருந்து பலர் வெள்ளித்திரைக்குப் போவதும் வாடிக்கையாகவே இருந்து கொண்டிருக்கிறது. ஆனால் எந்த துறையாக இருந்தாலும் திறமை இருந்தால்தான் அவர்களால் நீடித்து நிற்க முடியும். அப்படி சின்னதிரையிலிருந்து திரையுலகிற்குச் சென்ற கொடிகட்டிப் பறக்கும் பாலிவுட் நடிகைகளை பற்றி இதில் தெரிந்துகொள்ளலாம்.
மிருணாள் தாக்குர்: 2018ஆம் ஆண்டு லவ் சோனியா என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் நடிகையாக அறிமுகமானார். அதன்பின், சீதா ராமம், ஹை நன்னா ஆகிய தெலுங்குப் படங்களின் மூலம் தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகையாக மாறிவிட்டார். ஆனால் இதற்குமுன் கும்கும் பாக்யா, முஜ்சே குச் கெஹ்த்தி யே காமோஷியான் என்ற இந்தி நாடகங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார் என்பது குறிப்பித்தக்கது.
தீபிகா படுகோன்: பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வரும் தீபிகா படுகோன் இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். ஆனால் ஆரம்பத்தில் மாடலாக இருந்து தொலைக்காட்சி மூலம் சின்னதிரை நாடகங்களில் நுழைந்து ‘கஹானி கர் கர் கி’யில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார். அதன்பின் பாலிவுட்டுக்கு சென்று ஓம் சாந்தி ஓம், காக்டெய்ல், பிக்கு, பத்மாவத், பதான், ஜவான், கல்கி 2898 போன்ற பல வெற்றி படங்களில் நடித்து கதாநாயகியாக ஜொலித்துவிட்டார்.
வித்யா பாலன்: தொலைக்காட்சியில் இருந்துதான் திரை வாழ்க்கையை தொடங்கினார் வித்யா பாலன். ஹம் பாஞ்ச் என்ற சின்னதிரை நாடகத்தில் நடித்திருந்தார். அதன்பின் வெள்ளித்திரையில் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி பரினீதா என்ற படத்தில் அறிமுகமானார். லஹே ரஹோ முன்னா பாய், பூல் புலாயா, நோ ஒன் கில்ட் ஜெசிகா, பா, கஹானி, இஷ்கியா, தி டர்ட்டி பிக்சர், மிஷன் மங்கல், சகுந்தலா தேவி என பல வெற்றி படங்களில் வித்யா பாலன் நடித்துள்ளார்.