கமல் எனக்கு கடவுள் போன்றவர்: வடிவேலு

1 mins read
f571e9c3-c962-4f0e-b4b9-31af59da00b7
நகைச்சுவை நடிகர் வடிவேலு. - படம்: ஊடகம்

என் ராசாவின் மனசிலே படத்துக்கு பிறகு ‘தேவர் மகன்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு நடிகர் வடிவேலுக்கு கிடைத்தது.

அவருடைய வாழ்க்கையை புரட்டிப் போட்ட படங்களில் தேவர்மகனுக்கு முதன்மையான இடம் உண்டு. இதனிடையே நேர்காணால் ஒன்றில் பேசிய வடிவேலு, நடிகர் கமல்ஹாசன் தனக்கு கடவுள் போன்றவர் என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து கமல்ஹாசனின் சிங்காரவேலன் உள்ளிட்ட படங்களிலும் முக்கியமான நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிகர் வடிவேலு நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் கமல்ஹாசன், சிவாஜி கணேசன் என இருவேறு ஜாம்பவான்களுக்கிடையில் தான் நடித்ததாகவும் நடிகர் சிவாஜியே தன்னுடைய கதாபாத்திரம் மிகவும் சிறப்பாக அமைந்திருந்ததாக பாராட்டு தெரிவித்ததாகவும் வடிவேலு மேலும் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்