தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விஜய்யின் 69வது படம் அரசியல் குறித்து பேசாது: இயக்குநர்

1 mins read
814a3d03-d47c-4e7c-a87b-26a3e9a79444
படம்: - ஊடகம்

விஜய் நடித்துள்ள ‘தி கோட்’ படம், செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக உள்ளது. இதை வெங்கட்பிரபு இயக்கியுள்ளார்.

இதையடுத்து அவர் நடிக்கும் 69வது படத்தை எச்.வினோத் இயக்கப் போவதாகச் செய்திகள் வெளியாயின.

இது விஜய்யின் கடைசி படம் என்றும் கூறப்படுகிறது. இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

இதற்கிடையே விழா ஒன்றில் கலந்துகொண்ட இயக்குநர் வினோத், அந்தப் படத்தை இயக்க இருப்பதை உறுதி செய்தார்.

அவர் கூறும்போது, “விஜய்யின் 69வது படம் 200 விழுக்காடு விஜய் படமாகவே இருக்கும். இந்தப் படத்துக்கு என்னை ஒப்பந்தம் செய்யும்போதே, ‘எல்லோரும் பார்க்கும் படமாக இருக்க வேண்டும்’ என்று விஜய் சொன்னார்.

“அதனால் அரசியல் கட்சியையோ, அரசியல்வாதியையோ தாக்கும் படமாக இல்லாமல், 100 விழுக்காடு அனைத்து மக்களையும் மகிழ்விக்கும் படமாக இது இருக்கும்” என்றார் அவர்.

‘தி கோட்’ பட வெளியீட்டிற்குப் பிறகு இந்தப் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.

குறிப்புச் சொற்கள்