இந்தியத் திரையுலகைக் கலக்கிவரும் ராஷ்மிகா மந்தனாவின் கைவசம் மிகச் சிறப்பான படங்கள் இருக்கின்றன.
அவர் நடித்து வெளியாகவுள்ள சில படங்கள் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள பிரம்மாண்ட படைப்புகள்.
அல்லு அர்ஜுன் நடித்து பெரும் வெற்றி பெற்ற ‘புஷ்பா’ தெலுங்குப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகவுள்ளது. முதல் பாகத்தில் அசத்தியுள்ள ராஷ்மிகா ‘புஷ்பா 2’லும் இடம்பெற்றுள்ளார்.
மேலும், இந்திப் படமான ‘சாவா’, தனுஷின் ‘குபேரா’, ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகிவரும் சல்மான் கான் நடிக்கும் ‘சிக்கந்தர்’ ஆகிய விரைவில் வெளிவரவிருக்கும் படங்களிலும் ராஷ்மிகா நடிக்கிறார்.