பிரபல இசையமைப்பாளரும் ‘மேஸ்ட்ரோ’ இளையராஜாவின் இளைய மகனுமான யுவன் சங்கர் ராஜா மீது சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுவன், இரண்டு மில்லியன் ரூபாய் (31,682 வெள்ளி) வாடகை தராமல் மோசடி செய்ததாகப் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் நுங்கம்பாக்கத்தில் ஜமீலா என்பவரின் வீட்டில் வாடகைக்குக் குடியிருந்து வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு அங்கு வசித்து வந்த யுவன், கடந்த மூன்று ஆண்டுகளுக்கான வாடகையை தரவில்லை என்று அவர் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
ஜமீலாவின் சகோதரரான முகமது ஜாவித் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

