மோகன்லாலுக்கு மூச்சுப் பிரச்சினை

மோகன்லாலுக்கு மூச்சுப் பிரச்சினை

1 mins read
861c17f1-e28c-4b2e-abf9-5a1454c7b565
மலையாள நடிகர் மோகன்லால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். - கோப்புப் படம்: இணையம்

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுக்கு மூச்சுப் பிரச்சினை ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி நகரின் அம்ரிதா மருத்துவ அறிவியல் கழகத்தில் அவர் சேர்க்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. மோகன்லால், காய்ச்சல், மூச்சுப் பிரச்சினை, தசை வலி ஆகியவற்றுக்கு ஆளானதாக மாத்ருபூமி செய்தி தெரிவித்தது.

ஐந்து நாள்களுக்குப் பொதுமக்களுடன் தொடர்புகொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் என்று அவருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது; மருத்துவர் கூறிய மருந்துகளை எடுத்துக்கொள்ளுமாறு மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திதிரையுலகம்சினிமா

தொடர்புடைய செய்திகள்