தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உடல் எடையைக் குறைத்தபோது தவறு இழைத்தேன்: கீர்த்தி சுரே‌ஷ்

1 mins read
5e85068a-f6d2-4299-8454-6fd9a054ac87
கீர்த்தி சுரே‌ஷ். - படம்: ஃபில்மிபீட் / இணையம்

கதாநாயகியாக நடிக்கத் தொடங்கியபோது சற்று பருமனாக இருந்த கீர்த்தி சுரே‌ஷ் அண்மைக் காலமாக உடல் எடையைக் குறைத்து பலரின் கனவுக் கன்னியாக மலர்ந்துள்ளார்.

தனது சுட்டித்தனமான முகம், நடிப்புத் திறமை ஆகியவற்றைக் கொண்டு ஏற்கெனவே பலரைக் கவர்ந்த கீர்த்தி சுரே‌ஷ் இப்போது மேலும் கவர்ச்சியாகத் தோற்றமளிக்கிறார்.

எனினும், முதலில் தான் உடல் எடையைக் குறைத்தபோது தவறு இழைத்துவிட்டதாக அண்மையில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் அவர் தெரிவித்தார். finallytvoffl இன்ஸ்டகிராம் பக்கத்துக்கு அளித்த நேர்காணலில், உடல் எடையைக் குறைக்கும்போது ‘கார்டியோ’ எனப்படும் எடையை மட்டும் குறைக்கும் உடற்பயிற்சிகளில் கவனம் செலுத்தியதாகவும் உறுதியான தோற்றத்தைத் தர உதவும் வலிமை சார்ந்த உடற்பயிற்சிகளை மேற்கொள்ளவில்லை என்றும் கீர்த்தி சுரே‌ஷ் குறிப்பிட்டிருந்தார்.

View post on Instagram
 

அதனால் முகம் சற்று களையிழந்து காணப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார். ஆனால், பிறகு அதைச் சரிசெய்ய உடல் வலிமையை அதிகரிக்கும் உடற்பயிற்சிகளில் ஈடுபட்டதாகக் கூறினார்.

கீர்த்தி சுரே‌ஷ் தமிழில் கடைசியாக நடித்து வெளிவந்த படம் ‘ரகு தாத்தா’.

குறிப்புச் சொற்கள்