லோகே‌ஷ் கனகராஜுடன் இணைகிறாரா அமீர் கான்

1 mins read
4107bbdc-b23d-45b6-9f38-cf22e9ad871b
லோகே‌ஷ் கனகரா‌ஜ். - படம்: திஹான்ஸ்இந்தியா / இணையம்
multi-img1 of 2

பாலிவுட் நட்சத்திரம் அமீர் கான், தமிழ்த் திரையுலகை ஒரு கலக்கு கலக்கிவரும் இயக்குநர் லோகே‌ஷ் கனகராஜுடன் இணையப்போவதாக சில செய்திகள் வெளியாகியுள்ளன.

அஜித் நடிக்கும் ‘குட், பேட், அக்லி’ படத்தைத் தயாரிக்கும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் லோகே‌ஷ் கனகராஜ்-அமீர் கான் படத்தைத் தயாரிக்கவிருப்பதாக சில தகவல்கள் வெளியாயின. எனினும், இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் இதுவரை இல்லை.

அமீர் கான் கடைசியாக நடித்து வெளியான படம் ‘லால் சிங் சத்தா’. அதற்குப் பிறகு அவரின் ‘சித்தாரெ ஸமீன் பர்’ வெளிவரவுள்ளது.

இதற்கிடையே, ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ படத்தை முடித்த பிறகு கார்த்தி நடித்து பிரம்மாண்ட வெற்றிகண்ட ‘கைதி’ படத்தின் இரண்டாம் பாகத்தைத்தான் லோகே‌ஷ் கனகரா‌ஷ் இயக்குவார் என்றும் செய்தி வெளிவந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
திரையுலகம்சினிமாதிரைச்செய்தி