‘கொட்டுக்காளி’ புதிய போஸ்டர் வெளியீடு

1 mins read
4df203db-c99c-4fc5-a1c8-7d9b0aeb486f
‘கொட்டுக்காளி’ டிரெய்லரில் இடம்பெறும் காட்சி. - காணொளிப் படம்: சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் / யூடியூப்

கடந்த 2022ஆம் ஆண்டு இந்தியா சார்பில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ‘கூழாங்கல்’ படத்தை இயக்கிய அறிமுக இயக்குநர் பிஎஸ் வினோத்ராஜ் தனது அடுத்த படைப்பாக ‘கொட்டுக்காளி’யை இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படம் பல அனைத்துலகத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு மக்களின் ஆதரவைப் பெற்றுப் பல விருதுகளையும் வென்றுள்ளது. ‘கொட்டுக்காளி’ வரும் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 23) வெளியாகவுள்ளது. ‘கொட்டுக்காளி’ திரைப்படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்தது. படத்துக்கான விளம்பரப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

இந்நிலையில், படத்தின் புதிய ‘போஸ்டர்’ ஒன்றைப் படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் சூரி பகிர்ந்துள்ள அந்த ‘போஸ்டரில்’ படம் வெளியாக இன்னும் 4 நாள்கள்தான் உள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திதிரையுலகம்சினிமா