இந்திய சினிமாவின் ‘முதல் பெண் சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கப்பட்டவர் நடிகை ஸ்ரீதேவி.
அவர் திரைப்படத் தயாரிப்பாளர் போனி கபூரை மணந்தார். இந்தத் தம்பதிக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரண்டு மகள்கள் உள்ளனர்.
நடிகை ஸ்ரீதேவி தமிழில் பாரதிராஜா இயக்கிய ‘16 வயதினிலே’ படத்தில் நடிக்கும் போது தனது மூக்கை ‘பிளாஸ்டிக் அறுவை சிகிக்சை’ செய்துகொண்டு மெல்லியதாகவும், கவர்ச்சியாகவும் மாற்றிக்கொண்டார்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் நடிகை ஜான்வி கபூரும் தன்னுடைய மூக்கை மாற்றிக்கொள்ள ‘பிளாஸ்டிக் அறுவை சிகிக்சை’ செய்துகொண்டார். தற்போது குஷி கபூரும் பிளாஸ்டிக் அறுவை சிகிக்சை செய்து கொண்டுள்ளார். குஷி மூக்கு மற்றும் முகத்தின் தாடை எலும்பு உள்ளிட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார்.