உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தற்போது வீடு திரும்பியுள்ள பின்னணிப் பாடகி பி. சுசீலா, தமிழ் ரசிகர்களுக்கு காணொளி வழியாக நன்றி தெரிவித்துள்ளார்.
“என் மீது தமிழ் ரசிகர்களுக்கு தனி அன்பு. பாடல்கள் என்றால் அவர்களுக்கு உயிர். அதனால்தான் கடவுள் என்னை ‘சரி இருக்கட்டும்’ என்று அனுப்பி வைத்துள்ளார். எனக்காக பிரார்த்தனை செய்து என்னை மீட்டுக் கொண்டு வந்த எல்லோருக்கும் மிக்க நன்றி,” என்று பி.சுசீலா தெரிவித்துள்ளார்.
கடந்த 17ஆம் தேதி பாடகர் பி.சுசீலா உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 88 வயதான அவர் சிறுநீரகக் கோளாறு மற்றும் வயது மூப்பு காரணமாக பாதிக்கப்பட்டதாக மருத்துவமனை தெரிவிதது.