இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கவுள்ள படம் ‘வாடிவாசல்’.
தற்போது அந்தப் படத்தின் பணிகள் தொடங்கியுள்ளதாக தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார்.
“கடந்த மாதம் நானும், வெற்றிமாறனும், சூர்யாவும் இணைந்து பேசினோம். படத்துக்கான வேலைகள் தொடங்கியுள்ளன. இதற்காக மதுரையில் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.
“3 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். அதிலிருக்கும் ஆபத்தை உணர்ந்தோம். லண்டனில் ‘ஜுராசிக் பார்க்’ படத்தை எடுக்க உறுதுணையாக இருந்த கலைஞர் ஒருவரிடம் இதுகுறித்து பேசியுள்ளோம். அதனால்தான் காலதாமதம் ஆகிறது. வேறு எந்தப் பிரச்சினையும் இல்லை” என்றார் தாணு.

