நடிகர் விஜய் நடிக்கும் ‘தி கோட்’ படத்தில் மறைந்த நடிகரும், அரசியல் தலைவருமான விஜயகாந்த் ‘ஏஐ’ தொழில்நுட்பம் மூலம் மீண்டும் திரையில் வலம் வரவுள்ளார்.
இதனை படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபுவும் உறுதி செய்தார்.
இந்நிலையில், நடிகர் விஜய் திங்கட்கிழமையன்று விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
இந்த சந்திப்பின்போது, இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, விஜய பிரபாகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
‘தி கோட்’ படத்தில் விஜயகாந்தை பயன்படுத்தியதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நடிகர் விஜய், பிரேமலதாவை சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
நன்றி தெரிவித்த பின் விஜயகாந்தின் உருவப்படத்துக்கு நடிகர் விஜய் மரியாதை செலுத்தியுள்ளார்.
சந்திப்பு தொடர்பான புகைப்படத்தை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ள வெங்கட் பிரபு, “விஜயகாந்த் ஆசியுடன் ‘தி கோட்” என பதிவிட்டுள்ளார்.
‘தி கோட்’ என்று அழைக்கப்படும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி திரைக்கு வருகிறது.