படமாக உருவாகும் யுவராஜ் சிங் வாழ்க்கை

1 mins read
f1fa1cd6-eaf8-4d36-9724-bde12803bf6a
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கின் வாழ்க்கையை மையமாக வைத்து திரைப்படம் ஒன்று உருவாக உள்ளது.  - படம்: ஊடகம்

இந்திய திரையுலகில் பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்படுவது வழக்கமான செயலாக மாறிவருகிறது. குறிப்பாக விளையாட்டு வீரர்களின் வாழ்க்கைப் படங்கள் தொடர்ந்து படமாக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கின் வாழ்க்கையை மையமாக வைத்து திரைப்படம் ஒன்று உருவாக உள்ளது.

பூஷன் குமார் தயாரிக்கும் இந்தப் படத்தை பற்றிய அறிவிப்பு சமூக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

புற்று நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு அதனை எதிர்த்துப் போராடி தன்னை மீண்டும் களத்திற்கு கொண்டு வந்து சாதித்தவர் யுவராஜ் சிங்.

யுவராஜ் சிங் ஒரு பேட்டியில், தனது வாழ்க்கை வரலாறு படமாக இருந்தால் சித்தாந்த் சதுர்வேதி தனது கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

தற்போது தயாரிப்பாளர் அறிவிப்பு மட்டுமே வந்துள்ளது, விரைவில் படத்தின் இயக்குனர், நடிகர், பெயர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்பு டோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் வெளியானபோது, டோனியாக நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. படத்தை பார்த்த அனைவரும் சுஷாந்த் சிங்கையே டோனியாக பார்த்தனர். அப்படி ஒரு நடிகர் தான் யுவராஜ் சிங்காக நடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்