‘சீதாராமம்’ படத்தை இயக்கிய ஹனு ராகவபுடி, அடுத்து இயக்கும் படத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு நாயகியாக இமான்வி நடிக்கிறார். மிதுன் சக்கரவர்த்தி, ஜெயப்பிரதா உட்பட பலர் நடிக்கின்றனர்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசை அமைக்கிறார்.
தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் உருவாகும் இந்தப்படம், வரலாற்றுப் பின்னணியைக் கொண்டது என்று தெரிவிக்கப்பட்டது. இதில் பிரபாஸ் போர்வீரனாக நடிக்கிறார்.
“உலகின் பார்வையில் இருந்து மறைத்து வைக்கப்பட்ட அநீதிகளுக்கும், மறந்து போன உண்மைகளுக்கும் ஒரே பதில் போர் என நம்பிய சமூகத்தின் நிழலில் இருந்து எழுந்த வீரனின் கதை இது” என்கிறது படக்குழு.
அண்மையில் பிரபாஸ் நடிப்பில் வெளியான கல்கி 2898 ஏடி. திரைப்படம் வசூலில் சாதனை செய்தது.