சிங்கமுத்துக்கு எதிராக வடிவேலு அவதூறு வழக்கு

சிங்கமுத்துக்கு எதிராக வடிவேலு அவதூறு வழக்கு

1 mins read
4eaa55ae-a9df-439e-b921-09d811b077ba
படம்: - ஊடகம்

ரூ.5 கோடி மான நஷ்டஈடு கோரி நடிகர் சிங்கமுத்துக்கு எதிராக நடிகர் வடிவேலு தொடர்ந்த அவதூறு வழக்கில், சிங்கமுத்து பதில் அளிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தாம்பரத்தில் பிரச்சினைக்குரிய நிலத்தை வடிவேலுக்கு சிங்கமுத்து வாங்கி கொடுத்ததாகவும் இதுதொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்தில் சிங்கமுத்துவுக்கு எதிராக வடிவேலு வழக்குத் தொடர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் சிங்கமுத்து, யூடியூப் ஒளிவழி ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் வடிவேலுவைக் குறித்து தரக்குறைவாகப் பேசியுள்ளார்.

இதனால், தனக்கு மிகவும் மனவருத்தம் ஏற்பட்டுள்ளதால், சிங்கமுத்து தனக்கு ரூ. 5 கோடி நஷ்டஈடாக வழங்க உத்தரவிட வேண்டும் என தனது மனுவில் வடிவேலு கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 2 வாரத்துக்குள் சிங்கமுத்து பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளி வைத்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்