பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும்போதே ஒரு மாணவன் தன்னிடம் காதலை வெளிப்படுத்தியதாகச் சொல்கிறார் நடிகை அனுஷ்கா.
அண்மைய பேட்டி ஒன்றில் அந்தக் காதலை ஏற்றுக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனுஷ்காவுக்கு இப்போது 43 வயதாகிறது. தெலுங்கில் முன்னணி நாயகியாக வலம் வந்த இவர், தற்போது நடிப்பதைக் குறைத்துக் கொண்டுள்ளார்.
அனுஷ்கா நடிப்பில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியிருக்கும் ‘காட்டி’ (Gaati) என்ற படம் ஜூலை 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருந்த நிலையில், தற்போது அதன் வெளியீடு தள்ளிப்போயிருக்கிறது.
‘பாகுபலி’ படப் புகழ் பிரபாசும் அனுஷ்காவும் காதலிப்பதாக முன்பு தகவல் வெளியானது. ஆனால் இருவருமே இதுகுறித்து ஏதும் கூறவில்லை.
இந்நிலையில், அண்மைய பேட்டியில் தனது காதல் அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார் அனுஷ்கா.
“பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும்போது, என் வகுப்பைச் சேர்ந்த பையன் என்னிடம், ‘உயிருக்குயிராக உன்னைக் காதலிக்கிறேன். ஐ லவ் யூ’ என்றான்.
“அப்போது, ‘ஐ லவ் யூ’ என்பதன் அர்த்தம்கூட எனக்குத் தெரியாது. இருப்பினும், அப்போது ‘ஓகே’ என்று சொன்னேன். இப்போதும் அது ஓர் இனிமையான நினைவாக மனதில் இருக்கிறது,” என்று அனுஷ்கா கூறியுள்ளார்.