திரைத்துறையில் முப்பது ஆண்டுகளை நெருங்கிவிட்டார் பாடலாசிரியர் பா.விஜய்.
பாடலாசிரியராக மட்டுமல்லாமல், வசனகர்த்தா, தயாரிப்பாளர், இயக்குநர் எனப் பன்முகம் காட்டும் இவர், தற்போது அகத்தியா என்ற படத்தை இயக்கி உள்ளார்.
இந்நிலையில், அண்மைய பேட்டி ஒன்றில் தனது திரையுலக அனுபவங்களை சுவாரசியமாகப் பகிர்ந்துள்ளார் பா.விஜய்.
“இத்தனை ஆண்டுகளில் சினிமாவில் நான் கற்றுக்கொண்ட விஷயம் ஒன்றே ஒன்றுதான். இங்கே வெற்றி என்பது கூட்டு முயற்சி.
“திரைத்துறையில் தனிப்பட்டவர்களின் வெற்றி என்பது சாத்தியமில்லை. உண்மையில் கூட்டு முயற்சியில்தான் ஒரு கலைஞனின் வெற்றி அடங்கியிருக்கிறது,” என்ற அனுபவ வார்த்தைகளை அப்பேட்டியில் உதிர்த்துள்ளார் பா.விஜய்.

