சிவராஜ்குமாருக்கு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுநீரகப் பையை அகற்றிவிட்டு செயற்கை சிறுநீரகப் பை வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.
பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் சிறுநீரகப் பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்ததால் அவருக்கு அமெரிக்காவில் மியாமி மாகாணத்தில் உள்ள புற்றுநோய் மருத்துவமனையில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது.
சிவராஜ்குமார் சிகிச்சைக்காக கடந்த டிசம்பர் 18ஆம் தேதி அமெரிக்கா சென்றார். அங்கு, மியாமி மாகாணத்தில் உள்ள புற்றுநோய் மருத்துவமனையில் மருத்துவர் முருகேஷ் மனோகர் மேற்பார்வையில் சிவராஜ்குமாருக்கு புற்றுநோய் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், மருத்துவரின் ஆலோசனையின்படி, சிவராஜ்குமாருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சிவராஜ்குமாருக்கு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுநீர்ப்பையை முழுவதுமாக அகற்றிவிட்டு, அவரது குடலைப் பயன்படுத்தி செயற்கை சிறுநீர்ப்பை பொருத்தப்பட்டுள்ளது.
தற்போது, சிவராஜ்குமாரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் விரைவில் அவரே காணொளி ஒன்றை வெளியிடுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.