தனியார் நிறுவனத்துக்கு விளம்பரத் தூதராக நடிகை தமன்னா நியமிக்கப்பட்டது கர்நாடகாவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அவருக்குப் பதிலாக கன்னட நடிகை ஒருவரை தூதராக நியமிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விளம்பரத் தூதராகச் செயல்பட, தமன்னாவுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு 6.2 கோடி ரூபாய் ஊதியம் பேசப்பட்டதாம்.
இத்தகவல் வெளியானதும் சில கன்னட அமைப்புகள் தமன்னாவுக்கு எதிராக வரிந்துகட்டியுள்ளன. இதனால் கர்நாடக அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவில் உள்ள நிறுவனங்கள் அரசாங்கம் அளிக்கும் பல்வேறு சலுகைகளைப் பெறுகின்றன. அதன் மூலம் சேமிக்கும் தொகையை வெளி மாநில நடிகைகளுக்கு அளிப்பதை ஏற்க இயலாது என அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

