தமக்கு எதிராக ஊடகங்களில் வெறுப்பை ஏற்படுத்தும் தகவலை மட்டுமே பரப்புவோர் அதை தயவுசெய்து நிறுத்திக்கொள்ளவேண்டும் எனப் பாடகி கெனிஷா தெரிவித்துள்ளார்.
இவருக்கும் நடிகர் ரவி மோகனுக்கும் இடையே காதல் மலர்ந்திருப்பதாகக் கூறப்படுகிறது. அவர் தன் மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரியுள்ளார்.
இந்நிலையில், தாம் நல்ல குடும்பத்தில் இருந்து வந்த பெண் என்று சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார் கெனிஷா.
“இதுவரை நடந்த அனைத்துக்கும் நான்தான் காரணம் என உறுதியாக இருந்தால், என்னை நீதிமன்றத்திற்கு வரவழையுங்கள்.
“சிலர் எனக்கு கொடுக்கும் சாபம், கொலை மிரட்டல் ஆகியவற்றால் நான் என்ன மனநிலையில் இருக்கிறேன் என யாராவது யோசித்தீர்களா?
“கர்மா குறித்தெல்லாம் பேசி என்னைக் குறைகூறுகிறீர்கள். ஆனால் உண்மை வெளியில் வரும்போது உங்களுக்கு எல்லாம் என்ன நடக்கும் என பார்க்க நான் விரும்பவில்லை,” என்று கெனிஷா தனது ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளார்.

