நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் ‘சுமோ’

1 mins read
cf1ef45c-4ba0-4015-ab3c-b446e01ef58e
‘சுமோ’ படத்தின் சுவரொட்டியில் இருந்து எடுக்கப்பட்ட காட்சி. - படம்: ஊடகம்

2019 ஆம் ஆண்டே படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்குத் தயாரான படம் ‘சுமோ’.

வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் ‘மிர்ச்சி’ சிவா, பிரியா ஆனந்த், யோசினோரி தசீரோ, விடிவி கணேஷ், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

அப்படத்தில் ஜப்பானைச் சேர்ந்த ‘சுமோ’ சண்டை கலைஞர் ஒருவர் நடித்துள்ளார்.

நகைச்சுவைப் படமாக உருவாகியுள்ள அப்படம், பலமுறை வெளியீட்டுத் தேதி பின்னர் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது மீண்டும் அப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் ஏப்ரல் 25 ஆம் தேதி கண்டிப்பாக அப்படம் வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்