‘ஹிப் ஹாப்’ தமிழா ஆதி நடித்த ‘மீசைய முறுக்கு’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2017ஆம் ஆண்டில், ‘ஹிப் ஹாப்’ ஆதி இசையமைத்து, இயக்கி, நடித்து வெளியான படம் ‘மீசைய முறுக்கு’.
இப்படத்தின் மூலம்தான் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார் ஆதி. அதன் பின்னர் அவர் சில படங்களை இயக்கியுள்ளார்.
அப்படங்கள் வசூல் அளவில் பெரிய வெற்றியைப் பெறாவிட்டாலும், தயாரிப்பாளர்களுக்கு இழப்பை ஏற்படுத்தவில்லை. மேலும், ஆதியின் இயக்கம் சிறப்பாக இருந்ததாக விமர்சகர்கள் பாராட்டியிருந்தனர்.
இந்நிலையில், ‘மீசைய முறுக்கு’ படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சியைத் தொடங்கியுள்ளார் அப்படத்தின் தயாரிப்பாளரான சுந்தர்.சி. அவரது அவ்னி மூவிஸ் நிறுவனம்தான் இரண்டாம் பாகத்தைத் தயாரிக்க இருப்பதாகவும் அதற்கான கதையை ஆதி தயார் செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.