சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் படம் ‘மூக்குத்தி அம்மன் 2’. இப்படத்தின் பூஜை பிரம்மாண்டமாக போடப்பட்டு படப்பிடிப்பு கடந்த சில நாள்களுக்கு முன் சென்னையில் தொடங்கியது.
படப்பிடிப்பில் நயன்தாராவிற்கும் இயக்குநர் சுந்தர்.சிக்கும் இடையில் ஏதோ பிரச்சினை ஏற்பட்டு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது என செய்திகள் வந்தன. இந்த விஷயம் குறித்து அண்மையில் இயக்குநர் சுந்தர்.சியிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர், ‘‘எனக்கும் நயன்தாராவிற்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. இந்தச் செய்தி ஏன் பரவியது எனத் தெரியவில்லை. நயன்தாரா மிகவும் அர்ப்பணிப்பு மிக்க நடிகை.
“படப்பிடிப்பிற்கு சிறிது நேரம் ஆகும் என்றால் நான் அவரை கேரவன் போகச் சொல்வேன். ஆனால், படப்பிடிப்புத் தளத்தில் இருப்பதுதான் அவரது பழக்கம். இந்த மாதிரி வெளியாகும் எல்லா கிசுகிசுக்களுக்கும் நான் பதில் சொல்லிக்கொண்டு இருக்க முடியாது,’’ எனக் கூறியுள்ளார்.