'சூப்பர்ஸ்டார்' ரஜினி ஆங்கிலத் தொடரில் அறிமுகம்

1 mins read
60561982-396f-4ebb-b863-c2bed4432a3b
படம்: டிஸ்கவரி சேனல் Photo credits: Discovery Channel -

திரைப்படங்களில் பார்த்த 'சூப்பர்ஸ்டார்' ரஜினிகாந்தை இனி பிரபல ஆங்கில தொலைக்காட்சி தொடரில் காணலாம்.

'இண்ட்டூ தி வாயில்ட் வித் பேர் கிரில்ஸ்' (Into the Wild with Bear Grylls) எனும் காட்டுப் பகுதிகளில் நிலைத்திருக்கும் தொடரில் அவர் இடம்பெறவுள்ளார்.

பிரிட்‌டனைச் சேர்ந்த பேர் கிரில்ஸ், பல உலகப் பிரபலங்களை இத்தொடரில் ஈடுபடுத்தி சவால்மிக்க சூழல்களில் அவர்களது தாக்குப்பிடிக்கும் தன்மையை சோதித்துள்ளார்.

அனைத்து இந்திய குடிமக்களும் தண்ணீரை சேமித்திட வேண்டும் என்றும் இதை அவர்களுக்கு உணர்த்த இந்த ஒளிவழி நிகழ்ச்சி ஒரு சிறந்த தளமாகவும் விளங்குகிறது என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

இது சிங்டெல் மியோ டிவி ஒளிவழி 202ல் (டிஸ்கவரி சேனல்) இன்றிரவு (மார்ச் 23, சிங்கப்பூர் நேரப்படி 10.50 மணிக்கு) ஒளிபரப்பாகும்.

இதன் மறு ஒளிபரப்பு மார்ச் 28ஆம் தேதி, இரவு 9.55 மணிக்கு இடம்பெறும்.