‘சூப்பர் ஸ்டார்’ பட்டம் ரஜினிக்கு மட்டுமே: சிவகார்த்திகேயன்

1 mins read
6a720a43-4178-4852-bcb6-f311daec8828
சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படத்தில் ஒரு காட்சி. - படம்: ஊடகம்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘மதராஸி’.

சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் சிவகார்த்திகேயன், ருக்மணி, அனிருத் உள்ளிட்டோர் அப்படத்தைக் கண்டுகளித்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சிவா, “மக்களோடு சேர்ந்து படம் பார்த்ததில் மகிழ்ச்சி. அனைவருக்கும் படம் பிடித்திருக்கிறது. மக்கள் எந்தக் காட்சியை ரசிக்கிறார்கள் என்பதை பார்க்கவே நானும், அனிருத்தும் திரையரங்கிற்கு வந்தோம். நாங்கள் எதிர்பார்த்த அனைத்து காட்சியிலும் மக்கள் கைதட்டி ரசித்தார்கள்,” என்று பேசினார்.

பின்பு ‘சூப்பர் ஸ்டார்’ பட்டம் குறித்த கேள்விக்கு, “எப்போதுமே சூப்பர் ஸ்டார் ரஜினி மட்டுமே,” என அவர் பதிலளித்தார்.

அதனைத் தொடர்ந்து ‘கோட்’ படத்தில் விஜய் உங்களுக்குத் துப்பாக்கி கொடுத்த காட்சி குறித்து கேட்டதற்கு, “அப்படத்தில் விஜய் என்னிடம் துப்பாக்கியைக் கொடுத்த காட்சியை மறக்க முடியாது. இந்தக் கதையும் துப்பாக்கியைப் பற்றிய கதை தான்,” என அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்