மேற்கத்திய படங்களைக் கொண்டாடும் வேளையில் சொந்த நாட்டில் இருந்து வரும் படங்களைக் குறைத்து மதிப்பிடுகிறீர்கள் என்று நடிகை ஜான்வி கபூர் கூறியுள்ளார்.
‘புஷ்பா’ படத்தின் முதல் பாகம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாம் பாகத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. ‘புஷ்பா 2’ திரைப்படம் வெளியான முதல் மூன்று நாளில் உலகளவில் ரூ.621 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் இருக்கும் அனைத்து ‘ஐமேக்ஸ்’ திரையரங்குகளிலும் தற்போது ‘புஷ்பா 2’ தான் திரையிடப்பட்டு இருக்கிறது. அதனால் ஹாலிவுட் படமான ‘இன்டர்ஸ்டெல்லர்’ இந்தியாவில் மட்டும் வெளியாகவில்லை. இதையடுத்து, அந்தப் படத்தின் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர்.
இதுபற்றி இன்ஸ்டாவில் வந்த பதிவுக்கு நடிகை ஜான்வி கபூர் பதிவு ஒன்றைப் போட்டு இருக்கிறார். “புஷ்பா 2’ படமும் சினிமாதான். மேற்கத்திய படங்களைக் கொண்டாடும் நீங்கள், சொந்த நாட்டில் இருந்து வரும் படங்களைக் குறைத்து மதிப்பிடுகிறீர்கள். மற்ற நாடுகளைப் பாராட்டுவது மற்றும் பெரிதாகப் பார்ப்பது, உள்நாட்டுப் படங்களை கேவலப்படுத்துவது வருத்ததை அளிக்கிறது,” என ஜான்வி கூறி இருக்கிறார்.